வள்ளிபுனத்தில் நடைபெற்ற செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்

72

2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உடைய 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையார் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது

வன்னிகுரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் உடைய பெற்றோர்கள் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்SHARE