நல்லூரில் ரணில்!

43

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாக்களுடன் சந்திப்பினை மேற்கொண்டார்.

அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் இந்த விஜயத்தை முன்னிட்டு நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

SHARE