காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது

46

காஷ்மீரில் மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு பக்கத்து மாநில சிறைகளில் அடைக்கப்பட்டனர்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொலை தொடர்பு மற்றும் இணைய தள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உமர்அப்துல்லா, மெகபூபா உள்பட 400 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அதோடு கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவித்தது.

SHARE