நாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா

77

கோட்டாபய ராஜபக்ச நாட்டை வழிநடத்துவதற்கு வல்லவர் எனத் தான் நினைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சிக்கு என ஒரு தலைவரும் கொள்கையும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய அவர் அதற்கு ஏற்பவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் எல்லாம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டால் கட்சி நிச்சயமாக தேர்தலில் தோல்வியடையும்.

அப்படி பொருத்தமற்ற வேட்பாளரை கட்சி நியமித்தால் எதிர்க்கட்சியின் வேட்பாளரே நிச்சயமாக வெற்றி பெறுவார். தேர்தலில் வெற்றிபெறுவது என்பது பொதுமக்களின் கைகளில் உள்ளன.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆளக்கூடியவர் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை” எனவும் கூறினார்.1

SHARE