முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை!

78

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட அம்பலவன் பொக்கணைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரமிடும்போது ரி.56 ரக துப்பாக்கியின் அடிப்பக்கம் தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த 17ஆம் திகதி  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டில் புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்றுவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய குறித்த வீட்டில் அத்திவாரமிடப்பட்ட பகுதியை முல்லைத்தீவு மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தோண்டியுள்ளனர்.

இதன்போது துருப்பிடித்த நிலையிலான ரி.56 ரக துப்பாக்கியும் அதற்கான நான்கு ரவைக்கூடுகளில் ரவை நிரப்பப்பட்ட நிலையில் ஆகாஸ் கைக்குண்டு, தமிழன்குண்டு என்பன சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுகள் அனைத்தையும் அழிக்கம் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE