ஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்!

152

ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் நோக்கிலேயே, வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழில், நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்பின் இணைப்பாளர், மரிய சுரேஷ் ஈஸ்வரி இவ்வாறு கூறினார்.

மேலும், இதனை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எமக்கு தேவையில்லை. அந்த அலுவலகத்தினால் எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்படுமாக இருந்தால் நாம் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

குறித்த அலுவலத்தினை யாழில் திறப்பதை நாங்கள் எதிர்ப்பது போன்று தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் எதிர்க்க வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE