பொரிஸ் ஜோன்சன், அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்

90

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜேர்மனிய அதிபர் அங்கலா மேர்க்கலைச் சந்திக்கவுள்ளார்.

பேர்லினில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கவுள்ளார்.

ஐரிஷ் எல்லையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது ஜனநாயக விரோதமானது என்றும் எனவே இது அகற்றப்படவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு விடயத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் எதிர்மறையானது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரெக்ஸிற் விடயத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்ற உண்மையான உணர்வு உள்ளது என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

மேலும் இதனை நாம் பாராளுமன்றத்தின் மூலம் பெறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதியளித்த அவர் ஒக்ரோபர் 31 அன்று ஒரு ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்த இல்லாமல் பிரித்தானியா வெளியேறும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரஸ்ஸல்ஸுக்கும் முன்னாள் பிரதமர் தெரேசா மேயிற்கும் இடையிலான ஐரிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளடக்கிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தத்தக்கது

SHARE