சம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு

120

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE