பரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

148

பரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

வவுனியா பரசங்குளம் கிராம மக்களினால் வவுனியா அரச அதிபர் ஐ.எம்.கனீபாவிடம் மகஜர் ஒன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் பற்றி தெரியவருவதாவது,


வவுனியா வடக்கு பரசங்குளத்தில் உள்ள குளத்தை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புனரமைத்து அப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளிற்கு அதன் கீழான காணிகள் பிரித்து  வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு 3 வருடங்கள் கடந்தும் அந்த காணிகள் தமக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அத்துடன் அப்பகுதியில் முன்னர் கடமையாற்றிய கிராமசேவையாளர் ஒருவர் தனது உறவினர்களிற்கும் தனக்கு தெரிந்தவர்களிற்கும்  வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் அக்காணிகளை வழங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தி நேற்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக அப்பகுதி மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இவ் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருபகுதி மக்களினால் மேற்படி குளத்திற்கு கீழ் உள்ள காணியானது தங்களிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டது எனவும் அதற்குரிய உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளது என்றும் இக்காணியில் பல வருடங்களாக தாம் விவசாய செய்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர். 
நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த கருத்துக்கள் தவறானது என தெரிவித்ததுடன், இதில் எந்த அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தே இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

SHARE