ஓகஸ்ட்30 வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் பேரணிகள்

204

எதிர்வரும் ஓகஸ்ட30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.இந்த நாளில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் மாபெரும் நீதி கோரும் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.போர் முடிந்து பத்துவருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றுவரை எந்தவித தீர்வையும் சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்பதுடன் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் காணப்படும் பொறுப்புக்கூறலை சிறிலங்கா இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமும் அவ நம்பிக்கையும் ஏற்பட்டுள்ள சூழலில் சர்வதேசத்தை நோக்கி கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் எதிர்வரும் 30திகதி மாபெரும் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

கிழக்கில் ஓகஸ்ட30 காலை 10மணிக்கு கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்து கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவு வரையும்

வடக்கில் ஓகஸ்ட் 30 காலை 10 மணிக்கு வவுனியா ஏ9 வீதி பன்றிக்கெய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்து ஓமந்தை சோதனைச்சாவடி வரையும்

இந்த பேரணிகள் எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இந்தப்பேரணிகளில் கலந்து கொண்டு சகல தரப்புக்களையும் தமிழின நீதி கோர ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE