பாரிசில் இருந்து ஐநா வரை மாபெரும் தமிழின நீதிகோரும் நடைப்பயணம் ஓகஸ்ட்28 ஆரம்பம்

335

சிறீலங்கா பேரினவாத அரசாங்கங்களால் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலான ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு அடையாள அழிப்பு ஆட்கடத்தல் சித்திரவதை வலிந்து காணாமல் ஆக்கப்படல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை போன்றவற்றிற்கு நீதி கோரி மாபெரும் நடைப்பயணம் எதிர்வரும் 28ம் திகதி பிரான்ஸ் பாராளுமன்றத்தின் முன்பாகவிருந்து ஆரம்பமாகி பிரான்சின் பல்வேறு முக்கிய நகரங்களின் ஆட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை தெளிவுபடுத்தி தியாகி திலீபனின் நினைவேந்தலான செப் 16ம் நாள் ஐநா மனித உரிமை பேரவை முன்பாக நிறைவடையும்

இந்த தமிழின நீதி கோரும் நடைப்பயணம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் முழு விளக்கம் அடங்கிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்கள்.

சிறீலங்கா அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உதாசீனப்படுத்தியும் பொறுப்புக்கூறலுக்கு பதிலாக அதற்கு எதிரான தீர்மானங்களை தமிழர் தாயகப்பகுதியிலும் சிறீலங்காவிலும் நடைமுறைப்படுத்தி சர்வதேசத்தின் சீற்றத்துக்கு உள்ளாகும் இவ்வேளையில் தமிழர்கள் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பெரு மக்கள் திரட்சியாக எமது போராட்ட நியாயத் தன்மைகளை காட்டவேண்டிய கால சூழல் இது.

ஆகவே இந்த நடைப்பயணத்திற்கு புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவரினதும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டப்படுகின்றது.

SHARE