காஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்து!

93

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதில் முதலாவதாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான அரண்மனையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை சந்தித்தார்.

இதன்போதே பிரான்ஸ் ஜனாதிபதி இதனை வலியுறத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுக்குறித்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE