சஜித்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்-குமுறுகிறார்-சாள்ஸ்

58

வடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் வடக்கில் மாதிரி கிராம வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதிகமான வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென்று பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் வீடுகள் வழங்கப்படுகின்ற போதும் அந்த மக்களுக்கான நிதி வழங்கப்படாதிருக்கின்றன.

அவரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் சரியாக முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. மக்கள் கடன்பட்டும் நகைகளை அடகு வைத்தே வீட்டின் மிகுதி பகுதியை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE