விபத்தில் சிக்கிய திருமண ஜோடி. சோகத்தில் குடும்பத்தினர்.

103

நாளைய தினம் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில்  திருமண ஜோடி விபத்தில் சிக்கியமை வவுனியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் நாளையதினம் (18.09) திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த நிலையில், இருவரும் இன்றையதினம்  மோட்டார் சைக்கிளில் அலுவல் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். 

இருவரும் குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் மணம்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ளதுடன், துணைவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் சிறு காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE