தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

180

அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை எனவும், எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-I 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்திலோ தொடர்புகொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE