பிரான்சு புறநகர் பகுதியில் திலீபனின் நினைவுக்கல்லுக்கு தினமும் வணக்கம்

122

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 32 ஆண்டு நீங்காத நினைவில் பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜோந்தே நகரத்தில் திலீபனின் நினைவாக நாட்டப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக திலீபன் பாரததேசத்திற்கு எதிராக ஐந்து அம்சக்கோரிக்கையை வைத்து உண்ணாமறுப்புப் போராட்டத்தை 32 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நாளான 15 ஆம் திகதி அதேநாளில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை அவரின் நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம், மலர் வணக்கம் அப்பிரதேசவாழ் மக்களால் செய்யப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து திலீபன் இன்னுயிர் ஈந்த 26 ஆம் நாள் வரை 12 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுடர் வணக்கம் நடைபெறும் இவ் ஈகம் நிறைந்த நினைவுகளில் ஏனைய பிரதேச மக்களும் வந்து கலந்து கொண்டு வணக்கம் செலுத்தி வருகின்றனர். 26 ஆம் நாள் ஒருநாள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

SHARE