சாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்!

63

வவுனியா உக்குளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

உக்குளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி சாய்பாபாவின் ஒளிப்படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின் பல ஒளிப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன், படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் 10 வருடங்களாக பாபாவை வணங்கி வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தனது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது தனது வீட்டிலும் அதிசயம் இடம்பெறுவதாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

SHARE