ஓக்டோபர்.1ல் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி போராட்டங்கள்

963

தமிழர் தாயகப்பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி வடக்கு கிழக்கு சகல மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.இதற்கான அழைப்பையும் போராட்டங்கள் நடைபெறும் நேரம் இடங்கள் என்பனவற்றை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐநா மனித உரிமைப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச்சென்றுள்ள வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் ஐநா முன்றலில் நின்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE