முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி

65

முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் இதன்போது உயர் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைவதற்காக கடல் மற்றும் வான் பரப்பில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இந்த கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரசாங்கத்தால் இனப்படுகொலை நடத்தப்பட்டபோது இவர்கள் கட்டளைத்தளபதிகளாக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE