ஒரு கைதியின் நாட்குறிப்பிலிருந்து ஈழநாதம் 08.04.1990

104


#காந்தியின் #பிறந்ததினத்தன்று #யாழ்பாணத்திலுள்ள #காந்தி #சிலைக்கு #ஒரு #பொதுமகன்கூட #மாலை #போடவில்லை#கடைசியாக #நான் #தான் #மாலை #போட்டேன் #நன்றியற்ற #மக்கள்#மேஜர் #ஜெனரல் #சர்தேஷ் #பாண்டே

26.9.1989 இன்று தீலிபனின் இரண்டாமாண்டு நினைவுதினம் கடந்த வருடம்போலவே இன்று முழுவதும் இருபத்துநான்கு மணிநேரம் நீராகாரம் இன்றி நாங்கள் அனைவரும் உண்ணா விரதம் இருக்க போகின்றோம் என்று எழுத்துமூலம் தெரியப்படுத்தியதை அறிந்த மேஜர் லக்கன் பால் இன்றைக்குக் காலை வடை போடுங்கள் உண்ணாவிரதமிருப்பவர்கள் எப்படியும் அதைக் கைவிட்டுவிடுவார்கள் என்று சமையல் வேலை செய்யும் பையங்களிடம் சொன்னாராம்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? சுதந்திர போராட்டம் என்றால் என்ன? தியாகம் என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லாத நேருவின் பேரனின் கட்டளைக்குக் கீழ் படிந்து செயற்படுபவர்களால் இப்படித்தான் எம்மை விளங்கிக்கொள்ள முடியும்.இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒருவிடயம் ஞாபகத்துக்கு வந்தது டீ.எஸ்.சேனநாயக்க இலங்கையில் பிரதம மந்திரியாக இருக்கையில் ஒரு சமயம் சொன்னாரம்.ஒரு பிளேன்ரிக்கும் வடைக்கும் சுருட்டுக்கும் தமிழனை விலைக்கு வாங்க முடியும் என்று எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் வடைக்கு விலைபோகும் இனமாகவே எங்களை கவனிக்கின்றார்.

ஒரு ஜூ.ஜீ.பொன்னம்பலமோ ஒரு அமிர்தலிங்கமோ வடைக்கு விலைபோகலாம் .ஆனால் இந்த தலைமுறை இந்தப்பாரம்பரிய நம்பிக்கைகளைத் தகரத்தெறியும்!

ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ்,புளோட் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் சில கடுமையான நோயாளிகளையும் தவிர எங்கள் புளக்கில் இருந்தவர்களை விசாரித்தும் மிரட்டிம் பார்த்தனர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. விடுதலை செய்யப்போகிறோம் என்று சொல்லி அனைவரையும் விசாரிப்பது இன்றும் தொடர்ந்தது.அடிக்கடி தனது பூணுலை வெளியே இழுந்துக் காட்டித்தான் ஒரு பிராமணன் என்று பெருமையடித்துக் கொள்ளும் கேணல் வாசவன் சிலரிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டாரம் எல்லோரும் தமிழ்ச்சாதி என்றே பதிலளித்தாரம். விசாரணைக்குப் போனவர்களிடம் மேசையில் இருந்த வடையைக்காட்டி விடுதலை தேவையென்றால் வடை சாப்பிடலாமே?என்று கேட்டார்கள். ஒருவருமே இவர்கள் வலையில் விழவில்லை என்று அறிந்து சந்தோஷம் அடைந்தேன்.

சிறையிலுள்ள கவிஞர்களின் கவிதைகளையும்,அந்தக் கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களையும் தாங்கிய தியாகத் தீலிபம் என்ற கையெழுத்தும் பிரதியான நினைவு மலர் வெளியிடப்பட்டது.எங்கள் அனைவரினதும் உணர்வுகளின் மொத்தவடிவம் இந்தமலர்.வெளியே போகும் காலத்தில் இந்த மலரை நாங்கள் அச்சில் பிரசுரிக்க வேண்டும் என்பது எல்லோரது ஆசையுமாகும்.சிறைக்குள் உருவாகிய ஓவியர்களுக்கு இன்று ஓவியப்போட்டி நாடாத்திப் பரிசு வழங்கப்பட்டது.மக்களின் துன்பங்களைக் களைவதற்கு தனது துப்பாக்கியையும் பேனாவையும் தீலிபன் பயன்படுத்தினான் என்ற சருத்தை விளக்கும் வகையில் பெரிய பாறாங்கல்லின் சுமையால் வேதனையில் துடிக்கும் ஒருவரின் சுமையை தனது பேனாவை நெம்புகோலாகப்பாவித்து ஒரு போராளி நீந்துவதாயும் அந்தப் போராளியின் தோளில் துப்பாக்கி இருப்பதாகவும் வரையப்பட்ட ஓவியத்துக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது .மொத்தம் ஐந்து பரிசுகள் வழங்கப்பட்டது. ஓவியங்களின் கற்பனையும் அவற்றின் அழகும் பிரமாதமாயிருந்தன.

ஒவ்வொரு புளொக்காக மேஜர் லக்கன் பால் பார்த்துச் சென்றார். ஆனால் விபரீதம் எதுவும் நடக்கவில்லை. ஒரு நாள் H புளக்கில் ஏதோ கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்தபோது அப்போது மேஜராக இருந்த டுத்தா என்ற மேஜரிடம் பின்னப்பட்ட வயறினால் எமது பையங்கள் அடிவாங்கினார்கள்.இன்று எல்லோரும் உண்ணாவிரதம் இருப்பதனால் அடிப்பதானால் அடிக்கட்டும் அதையும் நான் வரலாறாக்குவோம் என்றே கந்திருந்தோம்.காந்தியின் தேசத்தவர்களிடம் அகிம்சை படும்பாட்டை வெளியுலகம் அறிய வேண்டும்.

ஒரு நாள் இங்கு வந்த மேஜர் ஜெனரல் சர்தேஷ் பாண்டே என்பவர் காந்தியின் பிறந்ததினத்தன்று யாழ்பாணத்திலுள்ள காந்தி சிலைக்கு ஒரு பொதுமகன்கூட மாலை போடவில்லை. கடைசியாக நான் தான் மாலை போட்டேன் நன்றியற்ற மக்கள் உங்கள் உங்கள் மக்கள் என்று கண்டமாதிரி எல்லாம் திட்டிவிட்டுச் சென்றார். இதற்கு நாங்கள் என்ன செய்வது?காந்தீயத்தைக் கொன்றுவிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் என்ன பயன் ? மற்றது எங்கள் நாட்டில் திலீபனைதான் எமக்குத் தெரியும்.எங்கள் மனங்களில் திலீபன்தான் உயர்ந்து நின்கின்றான்.காந்தி சிலையில் உள்ள தடி கூட S.L.R. ஆகத்தான் எமது மக்களின் கண்ணுக்குத் தெரிகிறது.என்ன செய்வது? இது தவிர்க்க முடியாதது.காந்தி சிலை உயிர் பெற்றெழுந்தால் இந்திய இராணுவம் போட்ட மாலையை கழற்றி எறிந்திருக்கும் .எங்கள் நாட்டிலும் முன்னர் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு காந்தி என்றுதான் பெயர் வைத்தனர் ஆனால் இப்போது திலீபன் என்றுதானே பெயர் வைக்கிறார்கள்.இங்கு உதிக்கும் திலீபன்கள் இந்தியர்களுக்கே தியாகம் என்றால் என்ன என்பதை போதித்தார்கள் .போதிக்கிறார்கள்

SHARE