வேல்ஷ் சுதந்திரத்துக்காக பேரணிகள் நடைபெறுகின்றன

51

இங்கிலாந்திடமிருந்து வேல்ஷ் பிரிந்து செல்வதை ஆதரிக்கும் பேரணிகள் வேல்ஷின் மேர்திர் ரிட்பில் (Merthyr tydfil) நகரில் நடைபெற்றுவருகின்றன.

இந்த பேரணிகள் (Campaign group Yes Cymru) கம்றி பிரசாரக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்தப் பேரணிகளில் இளைஞர்கள் யுவதிகளே அதிகமாக்க காணப்பட்டனர்.

பிரெக்ஸிற் செயற்பாடு நெருக்கடி நிலையில் உள்ளதால் இங்கிலாந்திலிருந்து வேல்ஷ் பிரிந்து செல்வதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆயினும் வயதானவர்கள் வேல்ஷ் பிரிந்து செல்வதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் 800 ஆண்டுகளாக வேல்ஷ் இங்கிலாந்துடன் இணைந்திருப்பதாகவும் அதனால் தாம் வேல்ஷ் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

விவசாயம், பொருளாதாரம், சுற்றாடல், உள்ளூராட்சி சபைகள் முதலான அதிகாரங்களை வேல்ஷ் மாநிலம் கொண்டிருக்கின்றபோதிலும் தாம் பிரிந்துசென்று தாம் சுயமாக இருக்க விரும்புவதாக இளைய தலைமுறையினர் கூறுகின்றனர்.

பிபிசி தற்போது 1001 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 7% மானோரும் ஸ்கை நியூஸ் கடந்த ஆண்டு 1014 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 17% மானோரும் யூ கோவ் இந்த ஆண்டு 1014 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 24% மானோரும் வேல்ஷ் சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

SHARE