எனது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்: சஜித்

68

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள்  எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் கிடையாது.

ஆகையால், இரண்டு- மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தீர்வு கிடைக்கும்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்ததொரு மாற்றமும் இல்லை.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணியினுடைய சிவில் அமைப்புகளின் ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE