இலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவஞ்சலி

59

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஐந்து மாதங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலுள்ள ஆலயங்கள் உள்ளிட்ட தேவாலயங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளன.

இதில் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கலந்துகொண்டு அவர்களின் ஆத்மா சாத்தியடைய வேண்டுமென பிராத்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி,  கொழும்பிலுள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட எட்டு கத்தோலிக்க இடங்களில் பயங்கரவாத குண்டுவெடிப்பு  தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரகால தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவத்துக்கு காரணமான பலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், மடிக்கணனிகள் என பல முக்கிய பொருட்கள் மீட்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நாட்டில் சாதாரண நிலைமை ஏற்பட்டதுடன் அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டது.

மேலும் தடுப்பு காவலிலுள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் குறித்து ஏற்கனவே அரசாங்கத்தின் சில முக்கிய உறுப்பினர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள்  ஆகியோருக்கு தகவல் கிடைத்தும்  அதனை தடுப்பதற்கு எந்ததொரு நடவடிக்கையும் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை என பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால் இவ்விடயம் குறித்து உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்றத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE