இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதனடிப்படையில் நியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது