பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பயமாக உள்ளது: சீமான்

52

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது மிகவும் பயமாக இருக்கின்றதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீமான் மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதாரப் பாதிப்பு வந்த பின்புதான் வரியைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பும் மிகப்பெரிய பின்னடைவைக் கொண்டு வந்துள்ளன.

இது நடக்கும் என்று அவற்றைக் கொண்டு வந்த நாளில் இருந்தே கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், யாரும் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

இப்போது அந்த வரியைக் குறைக்கிறோம். இந்த வரியைக் குறைக்கிறோம் என்கிறார்கள். பாதிப்பு ஏற்பட்ட பின்னர்தான் வரிக்குறைப்பு பற்றிப் பேசுகிறார்கள்.

இந்நிலையில் பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு சரி செய்யப்போகின்றோம் என்பதை நினைக்கும்போது பயமாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE