உச்ச நீதிமன்றத்தின் மூத்த சட்டத்தரணி ராம் ஜெத்மலானி காலமானார்

48

உச்ச நீதிமன்ற மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி  தனது 95 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரின் இறுதிச் சடங்கு லோதி மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்த  ராம் ஜெத்மலானி,  இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.  மேலும் வாஜ்பாய் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இதேபோன்று ராம் ஜெத்மலானி, 18 வயதிலேயே வழக்கறிஞரானார். ஆனாலும் 17 வயதிலேயே வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

SHARE