நளினியை தொடர்ந்து முருகனும் பிணை கோரி மனு கையளிப்பு

52

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பிணை கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முருகனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளதாவது, “மகளின் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினி, வேலூரில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது கணவர் முருகனும் தற்போது பிணை கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அவர் பிரம்மபுரத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்” என கூறியுள்ளார்.

முருகன்– நளின் ஆகியோரின் மகளே ஹரித்ரா. இவரின் திருமண ஏற்பாடுகளை செய்யவே நளினி பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையிலேயே அவருக்கு  உயர் நீதிமன்றம் ஒரு மாதம் பிணை வழங்கியது.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி  பிணையில் விடுதலையான  நளினி, வேலூர் சத்துவாச்சாரி- ரங்காபுரம் புலவர் நகரிலுள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.

அவருக்கு கடந்த மாதம் 25ஆம் திகதியுடன் ஒருமாத கால விடுதலைக்காலம் முடிவடைய இருந்தது. இதற்கிடையே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மேலும் 3 வாரங்கள் விடுதலை காலம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே முருகன், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பிணை கேட்டு சிறைத்துறைக்கு மனு அனுப்பி உள்ளார்

SHARE