முத்தையா முரளிதரன் கருத்தை விவாதித்து நேரத்தை வீணாக்கவேண்டாம்-மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன்

318

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்படும் தமிழின நீதி கோரும் நடைப்பயணம் ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்தால் இன்று பதின்மூன்றாவது நாளாகவும் நடைபெறுகின்றது.பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது. குளிரும் புகாருக்கும் மத்தியில் உயர்ந்த மலைப்பகுதியின் ஊடாக நடைபயணப்போராட்டம் 340 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டியுள்ளது.

பாரிசிலிருந்து தொலைவில் இப்பயணம் நிற்பதால் விடுதலை உணர்வாளர்கள் அவர்களிடம் தேடிச்சென்று அவர்களோடு சிலமணிநேரங்களாவ,து நடைபயணத்தை மேற்கொள்வதுடன் உணவுகளையும் குளிர்பானங்களையும் கொண்டு சென்று வழங்கியுள்ளனர். நடைபயணப்போராளிகளுக்கு இது மிகவும் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.

இதில் தொடர்ந்து உடல் வலிகளோடும் தமிழின விடுதலைக்காக ஓயாத பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின உணர்வுச் செயற்பாட்டாளர்கள் எத்தகைய இடையூறுகள் இயற்கை உபாதைகள் ஏற்படினும் இந்த நடைப்பயணம் இலக்கை அடையும் தொடர்வோம் என உறுதி தெரிவித்துள்ளனர்.

நடைப்பணத்தில் ஈடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் தற்பொழுது சமுக வலைத்தளங்களில் பலரும் கருத்துக் கூறு விவாதித்துக் கொண்டிருக்கும் முத்தையா முரளிதரன் விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துத் தொடர்பாக கருத்து வெளியிடுகையில்

முத்தையா முரளிதரன் பற்றி கருத்துக்கூறி விவாதிப்பது என்பது வீண் நேரவிரயமாகும்.காரணம் முரளிதரன் என்பவர் தமிழர் தாயகச்சூழலில் பிறந்தவருமல்ல தமிழர் போராட்டத்தில் பங்கெடுத்தவருமல்ல.அவருடைய பிறப்பு வாழ்க்கை முறை கல்வி அனைத்தும் சிங்கள மண்ணிலேயே இருந்தது.அவரை முன்னைய காலங்களில் தமிழரென சிலர் உயர்த்திப்பார்த்திருந்தாலும் அவர் ஒரு சிங்கள மண்ணின் உணர்வு சார்ந்த ஒருவர்.அது மட்டுமன்றி சிறீலங்கா அணியில் முழுமையாக சிங்களவர்களுடன் சிங்களவராக தன்னுடைய விளையாட்டுக்காலத்தை கழித்தவர்.அப்படிப்பட்ட ஒருவரிடம் தமிழர் தாய் மண் தாய் பற்று தமிழ் பற்றை எதிர்பார்ப்பது என்பது எங்களுடைய முட்டாள் தனம்.எனவே முரளிதரனுடைய கருத்துக்களை தூக்கிப்பிடித்து தமிழர்கள் காலத்தை வீணடித்து விவாதித்துக்கொண்டிருக்காமல் தமிழர் தாயகத்துக்காக ஒவ்வொருவராலும் ஜனநாயக வழியில் எத்தகைய பங்களிப்பை விடுதலைக்காக ஐநாவில் நீதி கோருவதற்காக செய்ய முடியும் என்பது பற்றி சிந்திப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார்.

SHARE