தமிழர்கள் விடயத்தில் பெரும்பான்மை இல்லையென பிரதமர் கூறுவது அரசியல் நாடகம் – கஜேந்திரன்

85

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க, நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவது, அரசியல் நாடாகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு அவருக்கு முடிந்தது.

அதேபோன்று பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியபோது, அவர் தனது பெரும்பான்மையை நிருபித்து மீண்டும் பதவியேற்றிருந்தார்.

ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்கும் விடயத்தில் மாத்திரம் பெரும்பான்மையில்லையென கூறி அவர் போலியான நாடகமொன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE