ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகிறார் மோடி

65

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 112 நாடுகளின் தலைவர்கள், 48 நாடுகளின் பிரதமர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.நா.கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நியூயோர்க் நகரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

SHARE