ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.முக்கிய அறிவிப்பு

62

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

இதன்போது தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிஷேல் பச்சலெட் அம்மையார், “ஜம்மு காஷ்மீரில், சட்டப்பிரிவு 370யை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

மேலும் காஷ்மீர் மக்கள் மீது இணையம், தொலைபேசி கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.

ஆகையால் இந்திய அரசு தற்போதைய ஊரடங்கு உத்தரவுகளைத் தளர்த்த வேண்டும்.

மக்களின் இயல்பான சேவைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதுடன். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து விடுவிக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் எல்லையின் இரு புறங்களில் இருந்தும் மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகளவில் எங்களுக்கு கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE