15வது நாளில் தொடரும் தமிழின நீதி கோரும் நடைப்பயணம்

102

கடந்த மாதம் 28ம் நாள் தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய தமிழின நீதி கோரும் நடைப்பயணம் நேற்று பதின்னான்காவது நாளை கடினமான மலைப்பாiதைகளுடாக கடந்து இன்று பதினைந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமிழின எழுச்சியையும் தமிழ் மக்களின் விடுதலைக்கான நியாயமான போராட்டங்களைம் தமிழினத்துக்கான நீதியையும் விரும்பும் இந்த நடைப்பயணப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு மிக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நெடுங்காலமாக தொடர்ந்து பங்கெடுத்து அயராத தமிழின விடுதலைக்காக பாடுபட்டு வரும் உணர்வாளர்கள் கால் உடல் வலியை தரக்கூடிய நீண்ட நடைப்பயணத்தை யாவற்றையும் பொறுத்து மக்களுக்காக நடந்து வருகின்றார்கள்.

இந்த நடைப்பயணச் செயற்பாட்டாளர்களுக்கு இன்னும் பல தமிழின உணர்வாளர்கள் இடையிடையே பாதைகளில் வந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கி இணைந்து நடந்து தமது பங்களிப்பையும் செய்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக புலம்பெயர் தமிழ் இளையோர்களும் இதில் தங்கள் ஆழமான கரிசனையை காட்டி தமிழின நீதி கோரி ஒத்துழைத்துள்ளார்கள்.

SHARE