பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் TIDயிடம் ஒப்படைப்பு!

47

ஜமாத் மில்லதே இப்றாஹிம் (JMI) எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 11 சந்தேகநபர்களும் அண்மையில் அம்பாறை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த  நிலையில், தற்போது மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE