ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு!

45

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் உள்ளிட்ட அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று (புதன்கிழமை) பேரணி நடத்த தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைத்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டுள்ளது.

வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் செல்ல முயன்ற கட்சித் தொண்டர்களை பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் பிற தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது

SHARE