முன்னாள் உறுப்பினர்கள் 418 பேருக்கு வரி இல்லாத வாகனகொள்வனவு – நிராகரித்தார் ஜனாதிபதிமைத்திரி

44

மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 418 பேருக்கு வரி இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டமுன்மொழிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

35,000 அமெரிக்க டொலர் நிதியின் கீழ் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன முன்மொழிந்த இந்த திட்டத்தினையே ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வரி இல்லாத வாகனங்களை வழங்க வேண்டும் என வஜிர அபேவர்தன வலியுறுத்தினார். அதன்பிரகாரம் அமைச்சரின் முன்மொழிவுக்கு சம்மதித்த பிரதமர், முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த நேரத்தில் அதனை அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் திறைசேரியில் தேவையற்ற சுமைகள் ஏற்படும் என்பதனால் அபேவர்தனவின் குறித்த முன்மொழிவை நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் எதிர்த்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE