வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

70

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடக்கு கிழக்கில் வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது இதுவரையும் இருந்து வந்த முறைமையை மாற்றி, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன முனைகின்றார் எனவும், அது அவரது அரசியல் அனுகூலங்களுகக்காகவே எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக வடக்கு கிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், கஷ்டப்பட்ட பிரதேசங்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும் என்பதால் மருத்துவர்களின் இடமாற்ற விடயத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘வடக்கு கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா’, ‘விரைவில் இங்கு பாரிய வைத்தியர் பற்றாகுறை’, ‘இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தத்துடன் கோசங்களையும் எழுப்பி, பேரணியாக சென்றிருந்தனர்

SHARE