16 திகதி உலகத் தமிழர்கள் எழுக தமிழாக எழுச்சி கொள்ளுமாறு நடைப்பயணத்தில் அறைகூவல்

66

தமிழின நீதி கோரும் ஐநா நோக்கிய நடைப்பயணம் இன்று 15வது நாளாக தொடர்ந்தேர்ச்சியாக தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச்செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று உலகத் தமிழர்களுக்கு நடைப்பயணத்தின்போது அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளனர்.தமிழின நீதி கோரும் நடைப்பயணச்செயற்பாட்டாளர்கள் சார்பாக மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் இந்த அறைகூவலை நடந்தபடியே விடுத்தார் அதில்

எத்தனை வலிகள் இடர்கள் வந்தாலும் ஐநா நோக்கிய இந்த நடைப்பயணத்தை நாம் இலக்கை அடையும் வரை தொடர்ந்து தடையின்றி செய்து முடிப்போம்.இன்று காலை தொடக்கம் மாலைவரை தொடர்ந்து நடந்து வருகின்றோம்.தொடர்ந்து போராடாமல் தமிழர்களுக்கு விடுதலை கிடையாது.எதிர்வரும் 16ம் திகதி ஜெனிவா ஐநா முன்றலில் இந்த நடைப்பயணத்தை நிறைவு செய்து அன்று ஐநா பிரதிநிதிகளிடம் தமிழினத்துக்கான நீதி கோரும் கோரிக்கை அடங்கிய அனுவை கொடுப்பதுடன் அன்று ஜெனிவா முருகதாசன் திடலில் நடைபெறப்போகும் எழுக தமிழ் மக்கள் எழுச்சியிலும் பங்கு பற்ற உள்ளோம்.

எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அன்றி எழுக தமிழ் என்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்களுக்கான உரிமையை திரண்டு சர்வதேசத்திடம் கோர வேண்டும்.அன்றைய தினம் தாயகத்தில் யாழ் முற்றவெளியிலும் புலத்தில் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் சம நேரத்தில் எழுக தமிழ் நடைபெற இருக்கின்றது.எனவே இதில் தமிழர்கள் அனைவரும் பெரும் திரளாக சென்று கலந்து கொள்வதன் மூலமே சர்வதேசத்துக்கு ஒரு சேதியை காத்திரமாக சொல்ல முடியும் என கஜன் தெரிவித்தார்.

SHARE