முல்லைத்தீவு இளைஞர் விமானநிலையத்தில் கைது!

77

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், முறிப்பு பகுதியைச் சேர்ந்த யேகேஸ்வரன் அனோயன் (வயது23) என குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில், சட்டவிரோதமான முறையில்மரம் வெட்டும் செயற்பாட்டைத் தடுக்கச் சென்ற வனவளத்திணைக்கள உத்தியோகத்தர் மீது, தாக்குதல்
நடத்தியமை, படையினரின் துப்பாக்கியைப் பறித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின்கீழ், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால், அந்த இளைஞருக்குப்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், சந்தேகநபர், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முடியாதவாறும், நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த இளைஞர் கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டபோதே, குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரை, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE