P.S.M. சார்ள்ஸினை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை

59

சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸினை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸினால் முன்னிலையாக முடியாத பட்சத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவரை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கச்சுரங்களிலிருந்து பெறப்பட்ட மண்ணை, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்தமை குறித்து ஓய்வுபெற்ற சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஆ. குணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த கோப்புகளை ஒப்படைக்குமாறு தெரிவித்தே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே அவர் இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார்.

அமைச்சரவையின் அனுமதிக்குப் புறம்பாக செயற்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அறுவைச் சிகிச்சை கையுறைகளை வழங்குவதில் முன்னெடுத்துள்ள முறைகேடுகள் குறித்து அவர் இன்றைய தினம் சாட்சியம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE