தமிழினப்படுகொலையாளிகளோடு கை கோர்த்த பாரதிராஜா அமீருக்கு- கஜன்

769

தமிழின உணர்வாளர்கள் தமிழ் தேசிய தமிழக பற்றாளர்கள் என தமிழீழ விடுதலைப்புலிகளின் மேன்மை தங்கிய தலைவர் வே.பிரபாகரனாலும் தமிழ் மக்களாலும் போராளிகளாலும் இதுவரை எண்ணப்பட்ட இயக்குநர் பாரதிராசா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் தற்பொழுது தமிழினப்படுகொலையாளிகளான சிறீலங்கா தரப்புக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயலாப அரசியலுக்காக மாவை சேனாதிராசா சிறீதரன் ஆகியோருக்கு பணத்தை வாரி வழங்கும் இலண்டன் கற்ப விநாயகர் ஆலய உரிமையாளர் கோபாலின் ஏற்பாட்டில் ஈழத்தில் தடம்மாறிய தரப்புடன் கைகோர்த்;திருப்பது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிறீதரன் மாவை சேனாதிராசா ஆகியோரின் சுயலாப அரச அடிவருடி அரசியலுக்காக பாரதிராசா பாக்கியராஜ் போன்றவர்கள் ஏற்கனவே முன்பும் ஈழத்துக்கு வந்துபோயுள்ளனர்.தமிழின உணர்வாளர்களாக கருதப்படும் பாரதிராசா அமீர் போன்றவர்கள் மிக கச்சிதமாக சிறீலங்கா அரசாங்கம் தன்னுடைய முகவர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணவழங்கியான இலண்டன் கோபால் மூலம் பல கோடி பணத்தை கொட்டி ஈழத்துக்கு அழைக்கப்பட்டு ஈழத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை அமைதி நிலவுகின்றது என்ற தோற்றத்தை உலகத்துக்கு காட்ட சிறீலங்கா அரசால் செய்யப்படும் வேலைத்திட்டத்தின் பங்காளிகளாக தற்பொழுது பாரதிராசா அமீர் போன்றவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள பிரான்சில் அகதியாக வசித்து வரும் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் விடுத்துள்ள காணொளி கருத்தில்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை பார்க்க ஆசைப்பட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே ஈழ மண்ணுக்காய் உயிர்கொடுத்த கரும்புலிகளும் பேராளிகளும் வாழ்ந்த மண்ணில் தமிழின உணர்வாளர்கள் என மதிப்பு வைத்து தலைவர் பிரபாகரன் தன்னருகே அழைத்து விருந்து பரிமாறிப் பேசிய இந்திய இயக்குனர் பாரதிராசா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் தற்பொழுது ஈழத்தில் நின்றபடி செய்திருக்கும் செயல் மன வேதனை அளிக்கின்றது.அதிலும் சிறீலங்கா அரச முகவராகவும் ஐநாவில் போய் சிறீலங்காவில் அமைதி திரும்பிவிட்டது.அங்கு இனப்படுகொலை நடைபெறவில்லை என கூறியும் வடக்கு கிழக்கில் நில அபகரிப்புக்கு பயன்படுத்தப்படும் பௌத்தத்துக்கு பெரு விழாவெடுத்து பிக்குகளை போற்றும் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனுடன் விருந்துண்டு அவர் வழங்கிய நினைவுச்சின்னமான புத்தர் சிலையை பெற்று ஈழத்தமிழ்ச் சமுகத்தின் மனத்தில் ஓங்கி உதைத்துள்ளனர் இயக்குனர் பாரதிராசாவும் அமீரும் இரண்டு பேர் மீதும் நாம் வைத்திருந்த மரியாதை மீது இன்று பெருங்கறை ஏற்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணைத்தூதரகமும் சிறீலங்கா அரசாங்கமும் மிகவும் சாதுர்யமாக தமிழகத்தில் இருக்கின்ற ஈழ மக்கள் மத்தியில் நன் மதிப்பு பெற்ற தமிழின உணர்வு திரைப்படைத்துறையினர் கலைஞர்களை வலையில் வீழ்த்தி தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து ஈழத்தமிழ் ஆதரவு நிலையில் இருந்து தமிழக ஈழ உணர்வாளர்களை அன்னியப்படுத்தும் வேலையை செய்து வருகின்றது அதன் ஒரு அங்கமே தமிழினப்படுகொலை அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்துவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தொடர்பில் உள்ள புலம்பெயர் கோடீஸ்வரரை வைத்து இயக்குனர் பாரதிராசா அமீர் ஆகியோரை வடக்குக்கு கொண்டு வந்து வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனின் விருந்தில் திளைக்க வைத்த நடவடிக்கை.

பாரதிராசாவும் அமீரும் ஈழத்தில் நிற்கும் அதே நேரத்தில் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காக கண்ணீரோடு குந்தியிருக்கின்றார்கள்.தங்கள் குழந்தைகளை போரில் இழந்த தாய்மார் அவலப்படுகின்றார்கள். சிறையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் வெளியுலுக தெரியாமல் வதைகின்றார்கள்.முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் மக்களுக்கு நீதி கோரி சர்வதேச நீதி கோரி நிலத்திலும் புலத்திலும் ஈழ மக்கள் போராடி வருகின்றார்கள்.இவ்வாறாக தமிழர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலத்தில் அவர்களை கடந்து எவ்வாறு பாரதிராசாவுக்கும் அமீருக்கும் சிறீலங்கா அரச முகவர்களோடு கைகோர்க்கவும் விருந்துண்ணவும் விழாக்களில் கலந்து கொள்ளவும் மனம் வந்தது.பணத்துக்காக ஒரு இனத்தின் உணர்வை மிதித்து விட்டீர்களே மதிப்பிற்குரிய பாரதிராசா அமீர் அவர்களே என மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் தன் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE