ஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்

450

தென்னாசியாவின் அறிவுக்கருவூலமாகவும் ஈழத்தமிழ் மக்களின் அறிவு மொழி பண்பாட்டு அடையாளமாக திகழும் யாழ்ப்பாணப்பொது நூலகத்தின் வரலாற்று அனுபவத்தை எடுத்தியம்பும் ஒரு ஆவணமான அதன் மூத்த நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் என்ற நூல் எதிர்வரும் ஒக்டோபர் 20ம் நாள் பிரான்சு மண்ணில் அறிமுகம் செய்யும் விழாவும் யாழ் நூலகத்தின் நீண்ட கால அனுபவத்தை கொண்ட அதன் மூத்த நூலகரான நூலாசிரியர் ரூபவதி நடராஜாவுடனான கலந்துரையாடலும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஆன்ம வடுவாக காணப்படும் சிங்களப்பேரினவாதத்தின் யாழ் நூலக எரிப்புக் காலத்தில் அதன் நூலகராக இருந்து தன்னுடைய இளமைக்காலத்தில் சிங்கள பேரினவாதம் தமிழருக்கு இழைத்த பெருங்கொடுரமான ஒரு இலட்சம் வரையான நூல்கள் எரிந்து சாம்பராகக் காரணமான யாழ் நூலக எரிப்பை நேரடியாக கண்ட வரலாற்று அனுபவத்தை கொண்ட ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் பெரும் வரலாற்று ஆவணம் அடுத்த சந்ததிகளின் கையிலும் சம காலத்தவர் அனைவரும் வாசிக்கவேண்டியதுமான அனுபவ பகிர்வாக காணப்படுகின்றது.

ஏற்கனவே புலம்பெயர் தமிழ் மக்கள் வாழுகின்ற ஐரோப்பிய நாடுகள் பல வற்றில் வெளியிட்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த நூல் பிரான்சில் எதிர்வரும் ஒக்டோபர் 20ம் நாள் அறிமுகம் செய்து வைக்கப்படவிருக்கின்றது.அதன் விபரங்களும் தொடர்புகளுக்கான அனைத்துலக மனித உரிமைச்சங்கத்தின் இலக்கமும் கீழே தரப்பட்டுள்ளன.அனைவரையும் வரலாற்று பெறுமதி வாய்ந்த இந்த நூல் அறிமுக விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

நூல் அறிமுக விழா
நாள் 20 . 10 2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம் __15 .30


முகவரி 8 Rue De La Philosphie 93140 Bondy

தொடர்ந்து RER : E- Bondy

Tram : 4 -Arret- Les Coquetiers
Bus : 303- Arret- Les Marnaudes


தொடர்புகளுக்கு

அனைத்துலக மனித உரிமை சங்கம் __00 33 75 80 87 08 4

SHARE