தாக்குதல் குறித்து போலி எச்சரிக்கை – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்!

62

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 02ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் பிரபல நட்சத்திர விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்படும் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவருnமு இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE