பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது!

534

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(புதன்கிழமை) 30ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றமை, தேர்தல் நடவடிக்கைககளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

SHARE