இனப்படுகொலையாளி கோட்டபாயவின் பிரச்சாரத்திற்கு பாவிக்கப்படும் தமிழ் இளைஞர் யுவதிகள்

206

மட்டக்களப்பில் பல இளைஞர், யுவதிகள் கோத்தாவின் தேர்தல் பரப்புரைக்காக வீடு வீடாக சென்றதான பல படங்களை காணமுடிந்தது.

விடுதலை வரலாற்றின் பல பெரும் வீரநிகழ்வுகளை ஆற்றிய மைந்தர்கள் மட்டக்களப்பு மண்ணை சேர்ந்தவர்கள் என்பதுடன் ,மண்ணிற்காக தாயக கனவுடன் வித்தான எண்ணற்ற மட்டக்களப்பு மாவீரர்களையும் மனதில் கொண்டு தொடர்வோம்.

இலங்கையின் பிரதான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் கோத்தாவின் தேர்தல் பரப்புரைகளை பெரும் பணம் பெற்றுக்கொண்டு பிரசுரிக்கும் என்பதில் ஐயமில்லை.
அதை நாமும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.

ஆனால் இந்த இளைஞர்களும் , யுவதிகளும் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகுகின்றார்கள்.

சிறு பணத்திற்காகவும், வேறு பல சிறு சலுகைகளை எதிர்பார்த்தும் தவறானவர்களின் பின்னால் இந்த இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரள்கின்றார்கள்.

இந்த இளைஞர்களின் எதிர்காலநலன்களில் அக்கறை கொள்ளாது,தமிழர்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கும் தமிழ்அரசியல்வாதிகளே இதில் பெரும்குற்றவாளிகள்.

ஆனாலும், எமது வரலாற்றைப்புரட்டிப்பார்த்து , கோத்தாவின் இனப்படுகொலையினை மனதில் கொண்டு, இத் தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், இக்கொலைகாரனிற்கும் அவனை அண்டிப்பிழைக்கும் ஈனர்களையும் அடித்துவிரட்ட வேண்டும்.

மட்டக்களப்பில் கோத்தாவிற்கு பரப்புரை செய்யும் இவர்களும் எம் பிள்ளைகளே என உணர்ந்து அவர்களை எம் வழிப்படுத்தலே இன்றைய பிரதானதேவையாகும்.

அன்பான இளைஞர், யுவதிகளே.!
கோத்தா பெரும் இனப்படுகொலையாளி.
அவனை ஆதரித்து , நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வாக்கும் படுகொலைசெய்யப்பட்ட உங்கள் உறவுகளிற்கு நீங்கள் செய்யும் துரோகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கோத்தாவிற்கு கொடிபிடித்து துரோக வரலாறுகளில் நீங்கள் இடம்பிடித்துவிடாதீர்கள்.

SHARE