வல்லரசுகள் எழுத்து மூல வாக்குறுதி தந்தால் தேர்தல் பகிஸ்கரிப்பை கைவிடுவோம்-கஜேந்திரகுமார்

114

சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் தொடர்பில் யாழ் ஊடக மையத்தில் இன்று அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்துள்ளார்.அவர் தனது கருத்தில்

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருமே தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமைப்பட்ட விடயங்களையே கொள்கையாக வைத்துள்ளனர்.அதாவது ஒற்றையாட்சி பௌத்த சிங்கள நாடு இனப்படுகொலையாளிகளான படையினர் நாட்டின் நாயகர்கள் அவர்களை ஒருபோதும் தண்டனைக்கு உள்ளாக்க மாட்டோம் இவைதான் அவர்களுடைய ஒற்றுமைப்பட்ட கொள்கை.எனவேதான் இவர்களிடமிருந்த தமிழர்கள் எதை எதிர்பார்க்க முடியுமென்ற கேள்வி எழுகின்றது.

இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அவர்கள் தயாராக இல்லை.வடக்கு கிழக்கு இணைப்புக்கு அவர்கள் தயாராக இல்லை.ஆகவேதான் எமது கட்சிக்கு இந்த தேர்தலில் எந்தவித அக்கறையும் இல்லை.அதை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவு.ஆனால் இந்த பிரதான வேட்பாளர்களுக்கு பின்னுள்ள வல்லரசுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை எழுத்து மூலம் ஒரு சட்டவரையறைக்குள் தருவார்களானால் எமது கட்சி தேர்தல் பகிஸ்கரிப்பு என்ற நிலைப்பாட்டை பரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள முடியும் என கஜேந்திரகுமார் தெரிவித்ததுடன் மேலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

SHARE