வெளியானது ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

255

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 26ம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகபிரிவு அறிவித்துள்ளது.


இன்றிரவு 8மணிமுதல் அமுலிற்கு வரவுள்ள ஊரடங்கு சட்டம் 26 ம் அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
26ம் திகதி முதல் 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இரவு பத்துமணிமுதல் அதிகாலை 4 மணிவரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிற்கு இடையில் போக்குவரத்தினையும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.