கோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.

295

இலங்கை படையினரை இலக்குவைக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என கோத்தபாய தெரிவித்திருப்பது சர்வதேச தலைநகரங்களில் எதிரொலித்துள்ளது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது நன்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுகின்றது எனவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது
இது தொடர்பில் சண்டேடைம்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை படையினரை இலக்குவைக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பது வெறும் வாய்வார்த்தையில்லை.
இது அவரது ஆதரவையும்,பொதுத்தேர்தலில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான கட்சிகளிற்கான ஆதரவையும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

.

இலங்கையின் அனைத்து படைத்துறையினரையும் உள்ளடக்கிய நிகழ்வு என்பதால் யுத்தவெற்றி தின நிகழ்வுகள் மிகவும் முக்கியத்துவம வாய்ந்த தேசிய நிகழ்வாகும்.எனினும் செப்டம்பரில் இலங்கை விவகாரம் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ள நிலையில் எச்சரிக்கை குறிப்பொன்று முக்கியமானதாக காணப்படுகின்றது.

இது நன்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுகின்றது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வரும் அமெரிக்காவை போல இலங்கை சர்வதேச சமூகத்தினை பகைக்க முடியாது.
குறிப்பாக மேற்குலநாடுகளுடன் விரோத போக்கை பின்பற்ற முடியாது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உரை பல உலக நாடுகளின் தலைநகரங்களில் எதிரொலித்துள்ளது.
சில நாடுகள் இலங்கை எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் அதன் நிலைப்பாடு எவ்வளவு கடுமையானதாக காணப்படும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இரு தரப்பு மற்றும் பல்தரப்பு ரீதியில் பின்னிப்பிணைந்து நிலையிலேயே இந்த நிலை காணப்படுகின்றது.
கொரோனா வைரசிற்கு பிந்திய பொருளாதார மீள் எழுச்சி முயற்சிகள் தடைப்படும் சூழலில் பதில் நடவடிக்கைகளிற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன .