வவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.

102

வவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு. ஒருவர் கைது.

வவுனியா கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்பார்வையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினரால் சட்டவிரோத  கசிப்பு தயாரிப்பதற்கு  தயார் நிலையில் இருந்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 35000 மில்லிலீற்றர் கோடாவுடன் (ஸ்பிறிற்) சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா  பொலிஸ் பிரிவிலுள்ள கோவில்புதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு  காய்ச்சுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் தலைமையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பகுதியைச்சுற்றிவளைத்து முற்றுகையிட்ட உப பொலிஸ் பரிசோதகர்களான மாரசிங்க, சுபசிங்க, சாஜன் ஜெயந்த (35885) , கான்ஸ்டபிள்களான பிரசன்ன (82663), லலித் (85061), சபிதரன் (37763), நலிந்த (80721) ஆகியோரால்  கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 35000 மில்லிலீற்றர் கொண்ட கோடாவினையும் (ஸ்பிறிற்) அப்பகுதியை சேர்ந்த 55வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.