இனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

867

பிரான்சில் தலைநகர் பரிஸ்அருகாமையில் வில் நெவ் சென் ஜோர்ஜ் இல் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு

நினைவாக ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் நிழல்பட ஆதாரம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

பிரஞ்சு அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வில் நெவ் சென் ஜோர்ஜ் இல்

ஸ்ரீலங்காவில் நடந்த இனப்படுகொலையின் விவரம் அடங்கிய துண்டுப் பிரச்சாரமும் இன்று 25_ 05 _ 2020 _மாலை 14 h 00 மணிக்கு வழங்கப்பட்டது. இன்றைய கால சூழ்நிலையை தெரிந்து முக கவசம் (மஸ்க்) பிரஞ்சு மக்களுக்கு வழங்கப்பட்டது

திட்டமிடப்பட்டது 2 மணியிலிருந்து 5 மணி வரையும் ஆனால் எங்களால் திட்டமிட்டபடி வழங்க முடியவில்லை ஒரு மணி நேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முக கவசம் முடிவடைந்தது அதனால் மூன்று மணி 30 நிமிடத்திற்கு எமது கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தது

வில் நெவ் சென் ஜோர்ஜ் தமிழ் மக்களின் ஆதரவோடும் மற்றும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவோடும் வழங்கப்பட்டது