வவுனியாவில் இளைஞன் திடீர் மரணம்.

108

வவுனியாவில் இளைஞன் திடீர் மரணம்.


வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றையதினம் (08)காலை வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில்.
மேலதிக பரிசோதனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்தியோகு அன்ரணி (வயது35) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.